Monday, January 2, 2017

ஸ்ரீ வீர சாஸ்தா

ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் கேரளத்தில் அவதரித்தவர். சாஸ்தா அரும்புகழ் பெற விளங்குவதும் கேரளத்தில். சகல தெய்வங்களையும் போற்றித் துதி செய்த ஆசாரியர் சாஸ்தாவை தோத்தரித்திருக்கிறாரா?

சிவபெருமானைத் திருவடியிலிருந்து திருமுடிவரை வருணித்து சிவ பாதாதி கேசாந்த வர்ணன ஸ்தோத்ரம் என பகவத்பாதர் அருளியிருக்கிறார். அதில், முதலில் ஈசன் வாஸம் செய்யும் கைலாஸத்தையும், அவனது திவ்யாயுதங்களையும் வாஹன ரிஷபத்தையும் தோத்தரித்து விட்டு, சிவ குமாரர்களை தலைக்கொரு ஸ்லோகத்தால் போற்றுகிறார். இங்கே தான் ஆனைமுகனையும், ஆறுமுகனையும் துதித்தபின் ஒரு முழு ச்லோகத்தால் ஐயப்பனை வாழ்த்தி வழிபடுகிறார்.

விற்கையனாக விசைப்பரியேறிச் செல்வது வீரக்கோலம். புலிப்பாலுக்காகப் பந்தள ராஜகுமாரனாகக் காடு சென்றதே போன்ற தோற்றம். ஆனால் இது மூல ஐயப்பனின் அவதாரத்திலே காணும் நிகழ்ச்சியே. ஆசாரியர் மூல ஐயப்பனை நினைத்தே துதிக்கிறார் எனக் கொண்டால், சிவ கணத் தலைவனாக அவன் வேட்டைக்குச் செல்வதைச் சொல்கிறாரென்று ஆகும். பூத பர்த்தா என்று அவர் சொல்வது, ஈசனின் பூதப்படைக்கு நாயகன் சாஸ்தாவே என்று அவர் கருதுவதைக் காட்டுகிறது.

மூத்த பிள்ளை கணபதியை நாம் சிவ ஸேனா நாதனாக எண்ண, ஆசாரியரோ வீர சாஸ்தாவிற்கு இவ்வுயர்வைத் தருகிறார். (மலையாளத்தில் பூத நாதன் என்று ஐயப்பனைக் குறிப்பிடுதுண்டென்றும், மக்களும் அப்பெயர் வைத்துக் கொள்வதுண்டென்றும் அறிகிறோம்.)

பின்பு, வேட்டையாடும் வீரனிடம் கனிந்து வேண்டுகிறார். பின் இருவரிகளிலே பூதநாதனே! உனக்கு வேட்டை விளையாட்டில் தானே வேட்கை? அப்படியானால் வா, எண்ணங்கள் மண்டி வளர்ந்திருக்கும் என் மனமெனும் காட்டுக்கு! இந்தக் காட்டிலே விருப்பு, வெறுப்பு முதலான பல்வேறு விலங்கு கூட்டங்கள் திரிகின்றன. அவற்றுக்கு அச்சமூட்டி வேட்டையாடிப் புரிவாய்! இப்படிப் பிரார்த்திக்கிறார் ஆதிசங்கரர்.

கிராத வேடம் கொண்ட பரமேசனிடம் இவ்வாறே தமது சித்த அரணியத்திலே வேட்டையாட, ஸ்ரீசங்கரர் வேண்டுவதை சிவானந்த லஹரியில் காண்கிறோம். இங்கே மூத்த பிள்ளையின் ஸ்தானத்தோடு அப்பனின் ஸ்தானத்தையும் ஐயப்பனுக்கே கொடுத்து விடுகிறார்.

 “துரகவாகனம் ஸுந்தரானனம்” என்று ஹரிஹரசுதாஷ்டகம் (ஹரிவராசனம் விச்வ மோஹனம்) சாஸ்தாவை குதரைமேல் வர்ணித்துள்ளார் ஸ்ரீ கம்பங்குடி குளத்தூர்  ஸ்ரீனிவாச ஐயர். மேலும்

“அஸ்மத் குலேஸ்வரம் தேவம் அஸ்மத் சத்ரு வினாஸனம்” என்ற ஸ்லோகத்தில் சத்ருக்களை அழிப்பவனாக சாஸ்தாவை வர்ணித்துள்ளனர்

தமிழ்நாட்டில் பல கிராமங்களில் குதிரை வாகனத்தில் அய்யனார் (சாஸ்தா) கோவில்கள் பல காணலாம். கைகளில் ஆயுதம்  தாங்கியும், மின்னலை  விட  வேகமாக  செல்லும் பரிமீதேறி வீரக்கோலம் பூண்டு தீயவர்களை அழித்தும் மண்ணின் மைந்தர்களை காக்கும் மாவீரன்.

“அஸ்வாரூடையை நம” என்று தர்ம சாஸ்தா அஷ்டோத்திரத்தில் வருவது போல குதிரை வாகனனாகவும் கேதுவின் அம்சம் என்று குறிப்பதற்காகவும் வீர சாஸ்தா கேடையம்-வாளுடன் காட்சி அளிக்கிறார். வேப்பம்பட்டு அஷ்டசாஸ்தா திருக்கோவிலில் தான் வீர சாஸ்தா முதன்முதல் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.


ஸ்ரீ மஹா சாஸ்தா

“ஓம் மஹா சாஸ்த்ரே நம”  என்ற மந்திரமே தர்ம சாஸ்த்ரு அஷ்டோத்திரத்தின் முதல் மந்திரமாகும்.  

மஹாசாஸ்தா என்ற சொற்றொடர் ஸ்ரீ சாஸ்தாவின் மூல மந்திரத்திலுள்ளது. ஸ்ரீ சக்ரார்ச்சன தீபிகா என்ற நூலில் கொடுக்கப் பட்டுள்ளது.  இவருக்கு மற்றொரு பெயர் கால சாஸ்தா. கஜாரூட சாஸ்தா என்றும் அழைப்பதும் மரபு.

“ஓம் கால நாசன தத்பராய நம” கால-எமனை, நாசன-அழிக்கும், தத்பர-கருத்துள்ளவன், எம பயம் அகற்றுபவன். சாஸ்தா எமனுக்குக் காலில் விலங்கு பூட்டியதைப் பற்றி ஸ்ரீமணிதாஸர், 

“கர்த்தனாம் கேமன் என்றும் கண்டிருக்கின்றதொரு
தொண்டனுக்காகவே காலனை விலங்கு பூட்டி
துச்சணம் செய்யாமல் அக்ஷணம் இருத்தியுன்
சொல்லுறுதி கேட்க வைத்தாய்”

எனப் பாடியுள்ளார்.  

எமனே ஸ்ரீ சாஸ்தாவின் பெயரை உடையோர், அவருடைய பக்தர்கள் முதலியோரைக் கண்டால் அஞ்சுகின்றான். இந்த விஷயம் எமன் தன் தூதுவர்களிடம் சொல்வதாக ஸ்காந்த மஹாபுராணத்தில் (சிவரஹஸ்ய கண்டம், உபதேச காண்டம், அத்யாயம் 26) கூறப்பட்டுள்ளது. ஸ்ரீ மஹா சாஸ்தாவை வணங்குவோருக்கு எமபயம் நீங்கும்.

“தவளவாஹனம் திவ்யவாரணம்”, “களபகேசரி வாஜிவாஹனம்” என்றெல்லாம் ஹரிஹரசுதாஷ்டகம் (ஹரிவராசனம் விச்வ மோஹனம்) சாஸ்தாவை கஜாரூடனாக வர்ணித்துள்ளார் ஸ்ரீ கம்பங்குடி குளத்தூர் ஸ்ரீனிவாச ஐயர்.

“மத்தமாதங்க கமநம் காருண்யாம்ருத பூஜிதம்
ஸர்வ விக்னஹரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்”

மதம் பொருந்திய யானையை ஊர்தியாகக் கொண்டவரும், கருணை பொழியும் திருமுகத்தினரும், வணங்கத்தக்கவரும, எல்லா துன்பங்களையும் நீக்குபவரும் ஆகிய சாஸ்தாவை வணங்குகிறேன் என்றும்  
.
“த்ரியம்பக புராதீசம் கணாதீப சமன்விதம்
கஜாரூடமஹம் வந்தே சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்”

த்ரயம்பகபுரம் என்னும் புனித ஸ்தலத்தின் அரசனும், விநாயகர் அருகில் இருப்பவரும், யானையை வாகனமாக கொண்டு தம் பக்தர்களுக்கு அருள்புரிபவராக விளங்கும் சாஸ்தாவை வணங்குகின்றேன் என்றும் ஹரிஹர புத்ர நமஸ்கார ஸ்லோகம் சொல்கின்றதை கேட்கும்போது சாஸ்தாவிற்கு பிரதானமான வாகனம் யானை என்பதை புரிந்துகொள்ளலாம். 

கையில் கதை, அங்குசம்,பாசம், சூலம் போன்ற ஆயுதங்கள் விளங்கும் கரங்களை கொண்டு, மதம் கொண்ட யானை மீது எதிரிகளை அழிப்பவராக திகழ்கிறார். இன்னும் பற்பல நூல்களிலும் கஜ வாகனனாக கூறப்பட்டுள்ளது. 

ஆரியங்காவு, த்ரியம்பகபுரம் (திருவாரூர் அருகில்), காஞ்சி காமாக்ஷி சன்னதி, கள்ளிடைகுரிச்சி போன்ற மிக தொன்மையான பாடல்பெற்ற ஸ்தலங்களில் சாஸ்தாவை மதகஜ வாகனனாக காண முடிகிறது. கேரளா, தமிழ் நாட்டில் யானை வாகனம் கொண்ட அய்யனார் (சாஸ்தா) கோவில்கள் கணக்கிலடங்கா. இருப்பினும் மஹா சாஸ்தாவுக்கு கோவில் இது வரை இல்லை. வேப்பம்பட்டு அஷ்ட சாஸ்தா திருக்கோவிலில் தான் முதன்முதல் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.



ஞான சாஸ்தா


சாஸ்தா என்ற பெயருக்கு வழிநடத்துபவர் (அல்லது குரு) என்று அர்த்தம். அதனால் தான் ஐயப்பன் வழிப்பாட்டில் குரு முகமாகவே எந்த ஒரு செயலையும் செய்ய அறிவுரைப்பார்கள். 

ஞானமே வடிவாக தான் இருந்தாலும்,நியதிப்படி தன் குருவான சிவபெருமானிடம் உபதேசம் எடுத்துள்ளார். ஆசார்ய ஸ்தானத்தில் சிவபெருமானிடம் புஷ்பகிரி என்ற மலையருகில் உள்ள அழகிய மாளிகையில் சாஸ்தா, விநாயகர், கந்தர்,பார்வதி தேவி, பைரவர், வீரபத்ரர், மற்ற பூதகணங்கள் ஆகியோர் உபதேசம் எடுத்ததாக ஸ்காந்த மகாபுராணம் கூறுகிறது (சங்கர சம்ஹிதை, சிவ ரஹஸ்ய கண்டம், உபதேச காண்டம் - 86).

“ஓம் தக்ஷிணமூர்த்தி ரூபகாய நம; ஓம் வீணா புஸ்தக தர தக்ஷிணாமூர்த்தி சாஸ்த்ரே நம:” etc போன்ற நாமங்கள் நமக்குணர்த்தும் விஷயங்கள்:சாஸ்தா மாணிக்க வீணையை ஏந்திய கையுடன், கல்லால மரத்தின் அடியில் அமர்ந்துள்ள குருபகவான் போல் குரு ஸ்தானத்தில் அமர்ந்து மேதா தக்ஷிணாமூர்த்தியாக காட்சி அளிக்கிறார். 

கும்பகோணம் அருகே ஆலங்குடி என்ற ஊரில் தக்ஷிணாமூர்த்தி கோவில் உள்ப்ரகாரத்தின் மேல்பத்தியில் கல்யாண சாஸ்தா உற்சவ மூர்த்தியாக வீற்றிரிக்கிறார். ஆந்திர பிரதேசம் அனந்தபூர் மாவட்டம், ஹேமாவதி என்ற ஊரில் சாஸ்தா மாதிரி குந்தியிட்டு உட்கார்ந்த நிலையில் தக்ஷிணாமூர்த்தி காட்சியளிக்கிறார்.

“ஓம் சர்வ ஸ்த்ரார்த்ரார்த்த தத்வஞாய நம, ஓம் வித்யா விருக்ஷாய நம, ஓம் மூல வித்யா ஸ்வரூபகாய நம”etc என்றெல்லாம் சாஸ்த்ரு சஹஸ்ரநாமத்தில் படித்திருக்கிறோம் அல்லவா?

ஞானம் என்பது பகவானுடைய நிர்குண, நிராகார, நிரதிசய தத்துவங்களின் பெருமை, ரகசியம், ஆகியவற்றை அறிவது. விக்ஞானம் என்பது குணங்களோடு கூடிய (ஸகுணமான) தெய்வத் திருமேனியின் தத்துவங்கள், கல்யாண குண வைபவங்கள், மகிமை, பெருமை, நாம விசேஷம் இவற்றைப் பற்றிய உண்மையறிவு. இவ்விரண்டினையும் அளிப்பவர் சாஸ்தா.

இவ்வுலகில் சிறப்பாக வாழ்வதற்குத் தேவையான எல்லாத் துறைகளைப் பற்றிய அறிவுவையும் தன் பக்தர்களுக்கு வழங்குபவன். அது தவிற, எந்த ஒரு ஞானத்தையடைந்தால், மற்றெல்லா ஞானத்தையும் அடைந்ததாக ஆகுமோ, அல்லது எதையடைந்தபின் மற்ற ஞானம் தேவையற்றதாக ஆகிவிடுமோ, அந்த தன்னைப் பற்றிய ஞானமாகிய ஆத்ம ஞானத்தை அருள்பவரான சாஸ்தா நம்மோடு இருக்கும்போது மனிதர்களாகிய நமக்கு வேறு என்ன தேவைப்படும்?

திருச்சூர் அருகே திருவல்லக்காவு என்ற இடத்தில் சாஸ்தா ஞானமூர்த்தியாக வழிப்பட்டு வருகின்றார். இங்கு வித்யாரம்பம் செய்த (எழுத்துக்கள் தொடங்கும்) ஒரு குழந்தை அறிஞர் ஆவது நிச்சயம் என்ற காரணத்தினால் ஆயிரக்கணக்கனோர் தன் குழந்தைகளின் வித்யாரம்பம் இங்கு செய்வது வழக்கம்.


சந்தான ப்ராப்தி சாஸ்தா

ஹரிஹர புத்திரரான சாஸ்தாவை மும்மூர்த்திகளின் அம்சம் என்றும் கூறுவதுண்டு. சிவபெருமான், சாஸ்தா அவதரித்தவுடன், “குழந்தாய்! நானும், விஷ்ணுவும், பிரம்மனும் உன் உருவாய் அவதரித்திருக்கிறோம்” என்று பாராட்டியதாக-

"த்வத் ரூபேணாவதீர்ணாஸ்ம, ப்ரஹ்மாவிஷ்ணுரஹம் ஸுத"                                   என்று ஸ்காந்த புராணத்திலுள்ள கோடிருத்ர ஸம்ஹிதையிலிருந்து தெரிகிறது.

மேலே கூறிய கருத்துக்களின்படி, ஹரி-ஹர சக்திகளான லக்ஷ்மியும், துர்கையும் பூர்ணா-புஷ்களாவாக ஐயனை அலங்கரிக்கின்றன. பிரம்மனும் இணைந்து மும்மூர்த்திகளின் அம்சமாக சாஸ்தாவை தியானிக்கும் போது, பிரம்மனது சக்தியாம் ஸரஸ்வதியானவள் பிரபா என்ற பெயரில் ஸ்ரீ மஹா சாஸ்தாவை காந்தர்வ முறையில் மணந்து கொண்டு ஸத்யகன் என்ற செல்லப்பிள்ளையுடன் கொலுவிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. சாஸ்தா-பிரபாவதி காந்தர்வ விவாஹம் அடிப்படையிலேயே எங்கள் குருநாதர் பிரம்மஸ்ரீ விஸ்வநாத சர்மா இயற்றிய சாஸ்த்ரு அஷ்டபதியும் அமைந்துள்ளது. கல்லிடைக்குறிச்சி, கொச்சி, நூறணி போன்ற பல இடங்களில் நடைபெற்று வரும் சாஸ்தாப்ரீதியில் செல்லப்பிள்ளைக்கு தனி ஸ்தானம் உண்டு. 

இரண்டு ஆண்மூர்த்திகளுக்கு அதிசயமான அவதாரமாக அவதரித்த ஹரிஹரபுத்திரனை பிரம்மச்சாரியாக (ஐயப்பனாக) உலகமே வழிபடும் போது, அந்த சாஸ்தாவைக் கல்யாண கோலத்தில் கண்டதுமின்றி குழந்தையுடனும் இருப்பதாக தியானிக்கும் போது இது ஒரு விசேஷமான அனுக்ரகமூர்த்தி என்று உணரலாம்.

ஸ்ரீ பூதநாத கராவலம்பத்தில் “ஸம்பூர்ண பக்த வர ஸந்ததி தான சீல” என்று வருகிறது. ஸ்ரீ மஹா சாஸ்தாவின் மூலமந்திரத்திலும் “புத்ரலாபாய” என்று வருகிறது. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதரின் க்ருதியில் “ப்ரார்த்தித புத்ர ப்ரதம்” என்று பகவானைப் பாடுகிறார். 

இராமாயணத்தில் புத்திர காமேஷ்டி யாகம் நடந்த பொது யாககுண்டத்திலிருந்து கையில் பாயச பாத்திரத்துடன் ஒரு "மகத்பூதம்" என்று வால்மீகி வர்ணிப்பது சந்தான ப்ராப்தி அருளும் சாஸ்தாவையே ஆகும். சோட்டானிக்கரை பகவதி, திருவள்ளக்காவு போன்ற கோவில்களில் இவரை  அரூபமாக வழிபட்டு வருகின்றனர்.


சம்மோஹன சாஸ்தா

சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் இருமுடியைச் சுமந்து கொண்டு சபரிமலைக்குக் கிளம்பும் முன்னர் ஓர் தேங்காயைத் தனது வீட்டின் வாயிற்படி அருகில் உடைக்கிறான். தான் இல்லாத நேரத்தில் தனது இல்லத்தையும், குடும்பத்தினரையும் பாதுகாத்து வர பகவானின் பூத கணங்களில் ஒன்றை நிறுத்த வேண்டி இதை செய்கிறான். உடனே தேங்காய் உடைத்த இடத்தில் ஓர் பூதகணம் தங்கிக் காவல் காக்கிறது.

சபரிமலை யாத்திரை முடிவுற்று வீடு நெருங்கியவுடன். யாத்திரைக் காலத்தில் தன் இல்லத்தைக் காத்து வந்த பூதகணத்தை தியானித்து வணங்கி ஐயனே! நான் யாத்திரை முடிந்து திரும்பும் வரை என் உடமைகளையும், குடும்பத்தினரையும் காத்தருளிய உங்களுக்கு எங்கள் அன்பு கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இனி தாங்கள் தங்கள் இருப்பிடம் செல்வீராக என்று முன்பு தேங்காய் உடைத்த இடத்திலேயே மீண்டும் தேங்காய் உடைத்து விட்டு வீட்டுக்குள் நுழைகிறான்.புராண காலம், வரலாற்றுக்காலம், நமது காலம் என்று காலங்கள் மாறலாம் ஆனால் இறைவன் கருணை என்றும் மாறாது. குறையாது என்பதை பின் வரும் கந்தபுராணத்தின் நிகழ்ச்சி நமக்கு தெரிவிக்கின்றது.

சூரபத்மன் கொடுமைகள் தாங்க முடியாமல் சிவனிடம் முறையிட இந்திரன் செல்ல வேண்டிய கட்டாயம் நேர்ந்தது, பூலோகத்தில் சீர்காழி அருகே மறைந்து வாழ்ந்து வந்த இந்திரன் கைலாயம் செல்ல முற்பட்டான். தான் பூலோகத்தில் இல்லாத நேரத்தில் சாஸ்தாவின் பாதுகாவலில் இந்திராணியை விட்டு சென்றான். இந்திரன் கைலாயம் சென்ற நேரத்தில் சூரபத்மனின் தமக்கையான அஜமுகி இந்திராணியை சித்ரவதை செய்ய, உடனே சாஸ்தாவின் பரிவாரமான வீரமாகாளர் அஜமுகியின் கையை வெட்டி எறிந்தார்.சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறுமுகத்தோன்  பிறக்க போகிறார். 

ஆறுமுகத்தோனே சூரபத்மனை வதைப்பார் என்ற செய்தியை அறிந்தவுடன் இந்திரன் பூலோகம் திரும்பினார்.தான் பூலோகத்தில் இல்லாத நேரத்தில் நடந்ததை கேட்டு சாஸ்தாவை த்யானிக்க சாஸ்தா வெள்ளையானை மேல் பூரணை புட்களையுடன் காட்சி தந்ததாக கந்தபுராணம் நமக்கு கூறுகிறது.



மேலும் புராணங்களில் பலவற்றுள்ளும் தொன்மையானது ஸ்காந்தம் என்பார்கள். அதில் திருமுருகவேள் அவதார காலத்திற்கும் முன்பே சாத்தனார் அவதாரம் செய்து பூரணை புட்களை  எனும் இருதேவியருடன் கயிலையில் வாஸம் செய்த ஆதியும் அந்தமும் இல்லா அருட் பெருஞ்சோதி என்று அறியலாம். இறைவனை முருகனின் தம்பியே முருகனுக்கிளையோனே என்றும் அழைப்பதை விடுத்து முருகனின் சோதரனே சரணமய்யப்பா என்று அழைப்பதே சாலப்பொருத்தமாகும்.


வேத சாஸ்தா

சிங்கம் தர்ம ஸ்வரூபமானது. பகவானுக்கு சிம்ம வாஹனம் உண்டென்பதை “சிம்மா ரூடாயை நம”, “ஓம் ஹர்யஷ வாஹன ரூடாயை நம” (ஹர்யஷம்-> சிங்கம், சாஸ்தா திரிசதி - 26) போன்ற நாமங்கள் மூலம் அறியலாம்.

சாஸ்தாவை "விப்ர பூஜ்யம்" என்று போற்றுகிறோம் - வேதம் கற்றறிந்தவர்ளால் பூஜிக்கப்படுபவன் என்று பொருள். அடர்ந்த காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்த ரிஷிகளுக்கெல்லாம் இஷ்ட தெய்வமாக விளங்கியவர் சாஸ்தா. அந்த காரணத்தாலேயே சாஸ்தா ஆலயங்கள் பெரும்பாலும் காடுகளிலும் மலைகளிலும் மட்டுமே காணப்படுகிறது போல் உள்ளது.

“ப்ரம்ஹா ரசிகாயை நம” என்று சாஸ்தாவுக்கு ஒரு நாமம் உண்டு. இதன் பொருள் : வேதம் ஓதுவதை ரசிப்பவன். “சர்வ வேத சாராயை நம” என்ற நாமம் மூலம் சர்வ வேத சாரமாக விளங்கும் சாஸ்தாவின் நாமத்தை ஒருமுறை உச்சரித்தாலே போதும், அனைத்து வேதங்களையும் ஓதினதாகும் என்ற உண்மையை விளக்குகிறது.

சாஸ்தாவே பரபிரம்மம்- தாரகபிரம்மம். சாஸ்தாவிற்கு “பஞ்சானனாய” என்ற பெயர் உள்ளது. சாஸ்தாவின் மூல மந்திரம் அடங்கிய ஸ்ரீ தர்ம சாஸ்தா மூல மந்திர விடுதியில் (9வது) பகவானுக்கு ஐந்து முகங்கள் உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. சிவஸ்வரூபியாக சத்யோஜாதம் , வாமதேவம், தத்புருஷம், அகோரம், ஈசானம் என்ற ஐந்து முகங்கள் உடையவன் என்று கொள்ளலாம்.

பஞ்சானனம்  என்ற சொல்லுக்கு பிளந்த வாய் கொண்ட சிங்கம் என்றும் பொருள் உள்ளது. விஷ்ணுவின் அவதாரமான நரசிம்ம ஸ்வரூபியாகவும் சாஸ்தாவை கருதலாம். பிரம்ம ஸ்வரூபியாக இருந்து பிரபாவதியை காந்தர்வ விவாஹம் செய்தது  நாம் அறிந்த சாஸ்தா மகாத்மியம். ஆக சாஸ்தாவே பிரம்மாவாகவும் விஷ்ணுவாகவும் சிவனாகவும் நமக்கு அருள் புரிகின்றார் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த உண்மையை வலுப்படுத்தும் வகையில் மைத்ராயணி உபனிஷத் "ப்ரம்மா, விஷ்ணு, சிவன், சாஸ்தா, ப்ரணவம், ப்ரம்மம் எல்லாம் ஒன்றே" என்கிறது.

தாரக பிரம்மமான சாஸ்தாவின் முகத்தில் இருந்து தான் வேதங்கள் தோன்றின. “வேத முகாயை நம”- வேதங்கள் தோன்றிய முகமுடையவன் என்றுரைக்கிறது. வேதங்கள் அவனுடைய மூச்சுக்காற்று. இந்த உண்மையை “யஸ்ய நி:வஸிதம் வேதா:” ஆதி சங்கரர் எடுத்துரைக்கின்றார் (ஜீவன் முக்தி விவேகம் முதல் சுலோகம்).

“ஓம் மந்திர வேதினே நம, ஓம் மஹா வேதினே நம, ஓம் ரிக் யஜுஸ் சாம அதர்வ ரூபிணே நம,” etc, போன்ற சாஸ்தா சஹஸ்ரநாமத்தை பார்க்கும்போது இந்த வேத யக்ஞங்களுக்கெல்லாம் அதிபதியாக இருந்து நற்பலனை வழங்குபவர் என்பது தெளிவாக தெரிகிறது.
நெல்லூர் மாவட்டம் தும்மகுண்டா என்ற ஊரில் சிம்ம வாகனனாக சாஸ்தாவை காணலாம். சேலம் அருகே வெடிகரம்பாளையம் என்ற கிராமத்தில் சாஸ்தா வேத மூர்த்தியாக விளங்குகிறார். ஞானத்தை அருள்வார். வேதம் தழைக்க அருள்புரிவார் புத்திமான். வேத அறிவுரைப்படி நம்மை நடத்தி செல்பவர்.

ஸ்ரீ ஆதிபூத நாதர்

நம்முடைய  இந்து மதத்தை போலவே சாஸ்தா வழிபாடும் சனாதனமானது. நமது நாகரீகத்தை வேதகால நாகரீகம் என்று சொல்லப்படுகிறது. எந்தவொரு சந்தேகம் ஏற்பட்டாலும் வேதமே பிரமாணம் ஆகிறது. வேதம் எப்பொழுது தோன்றியது என்று எவருக்கும் தெரியாது. ஆனால் வேத காலத்துக்கு முற்பட்டவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று பார்ப்போம். கல்லை ஆயுதமாகவும் இலை தழைகளை ஆடைகளாகவும் அணிந்த மனிதர்கள் மிருகம் போல்         ஆண்-பெண் பேதம் தெரியாமல் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு தங்களது மீறிய செயல்களில் பயந்து வாழ்ந்து வந்தனர்.
பஞ்ச பூதங்களை கண்டு பயந்த கற்கால மனிதன், ஆகாயம், வாயு, அக்னி, நீர், பூமி ஆகியவற்றை தெய்வங்களாக வணங்க வேண்டும் என்று நம்பினான். நம் கண்களால் நம்ப முடியாத அளவுக்கு பெருத்த உருவம் கொண்ட ஒன்றை பூதம் என்று அழைத்தார்கள். இவை தன்னிச்சையாக செயல்படாமல் ஒருங்கிணைந்து செல்வதற்கு ஒரு தலைவன் தேவைப் பட்டான். அவனே பூதநாதன் எனப்படும் ஐயப்ப ஸ்வாமி ஆவார்.  சாஸ்தாவின் மற்றொரு பெயர் பூதநாதன் என்பதாகும். இதற்கு பஞ்ச பூதங்களையும் அடக்கி ஆள்பவர் என்று பெயர்.
கடவுளாக கும்பிட வேண்டும் என்று நினைத்த கற்கால மனிதன், ஒரு குறிப்பிட்ட பாறைகளையோ மரத்தையோ வணங்க தொடங்கினான். இன்றும் திருநெல்வேலி போன்ற இடங்களில் உருவமற்ற பாறைகளை வழிபடுவது மரபு.

இதற்கு பின்னர் நாகரீகம் வளர்ந்து மனிதர்கள் மனிதர்களாக வாழ முற்பட்டனர். அவர்கள் கற்று கொண்ட முதல் தொழில்  மண் பாண்டம் செய்வது. அவர்கள் குயவர்கள் என்னும் இனத்தை சார்ந்தவர்கள். இறைவனை வழிபடுவதர்காக யானை குதிரை மனிதர்கள் போன்ற சிற்பங்களை உருவாக்கி இறைவனுக்கு படைத்தார்கள். தனக்கென்று ஒரு வீடு வேண்டும் என்று நினைத்த கற்கால மனிதன் கட்டிட கலை பயின்று தொழில்  ஆரம்பிக்கும் முன்பு சுதை சிற்பங்களாய் யானை குதிரை போன்ற சிற்பங்களை இறைவனுக்கு படைத்தார்கள். ஐயனார் கோவில்களில் யானை குதிரை போன்ற சுதை சிற்பங்கங்களை காண்பதுபோல் வேறு எந்த கடவுளுக்கும் இந்த வழிபாடு கிடையாது

நெசவு தொழில் செய்பவர்களும் சாஸ்தாவை வழிபட்டு இருக்கிறார்கள். நெசவு தொழில் செய்யும்  குடும்பத்தில் பிறந்த திருவள்ளுவரின் குலதெய்வம் சாஸ்தா என்று ஒரு கூற்று உண்டு. இப்படி கற்கால மனிதன் தான் செய்த பிரதான தொழில்களான விவசாயம் (உணவு), நெசவு (உடை), சுதை சிற்பங்கள் (இருப்பிடம்) ஆகியவைகளில் சாஸ்தாவை வழிபட்டு இருக்கிறார்கள் என்று தெளிவாகிறது


யுகங்களின் அடிப்படையில் சாஸ்தா வழிபாடு தொன்மையாகவே விளங்குகிறது. பிரளய காலத்திற்குப் பிறகு,முதல் மன்வந்தரம் முதல் ஆறாவது மன்வந்தரம் வரை சாஸ்தா வழிபாடே இருந்துள்ளது. ஆறாவது மன்வந்தரத்தில் தான் மத்ஸ்ய, கூர்ம, வராக, நரஸிம்ம அவதாரங்கள் ஏற்பட்டன. இதில் முதல் மூன்றுஅவதாரங்களில் சாஸ்தாவே கடலுக்கும் பூமிக்கும் ஆதாரமாக விளங்கினான். 

பாலாழிமதனம் கடையப் பெற்று சாஸ்தா அவதாரமானதும் இக்காலத்தில் தான். இந்த கால கட்டத்தில் பூவுலகம் ஏழு த்வீபங்களாக பிரிக்கப்பட்டன. இவற்றுக்கும் அதிபதி சாஸ்தாவே ஆகும். (உ.ம்: குசாதிப: சால்மலீபதி:) நரஸிம்ம அவதாரத்தில் காத்யாயன மகரிஷியின் பெண்ணான காத்யாயனி தேவிக்கு புத்திரனாக காத்யாயினி ஸுத: என்றும் ஸ்வாமி அழைக்கப்படுகிறார். 

வாமனாவதாரத்தில் வாமன பூஜித: என்று அழைக்கப்படுகிறார். இவை நடந்தது க்ருத யுகத்தில் ஆகும்.

க்ருத யுகத்தில் தொடங்கி பல யுகங்களில் அவதரித்து, கலியுக ப்ரத்யக்ஷம் என்று முத்துஸ்வாமி தீக்ஷிதர் பாடியது போல், கலியுகத்தில் பக்தர்கள் இறைவனை சரணமடைவதுமே ஸ்வாமி கலியுக தெய்வம் என்பதைபறைசாற்றுகின்றன. ஆக நான்கு யுகங்களையும், பல மன்வந்தரங்களையும் கடந்து சாஸ்தா யுக புருஷனாக இருக்கிறான் என்பது வெள்ளிவிடைமலை.
“ஸ்ரீ பூத நாத சதா நந்தா சர்வ பூத தயாபரா
ரக்ஷ ரக்ஷ மாஹோ பாஹோ சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ”
என்ற ஸ்லோகத்தில் சாஸ்தாவை பூத நாதனாக வர்ணித்து இந்த உலகையே காக்க வேண்டுகின்றோம்அல்லவா?

தமிழ் நாடு மற்றும் கேரளாவில் பல கோவில்கள்  இவருக்கு உண்டு. குறிப்பாக காடந்தேத்தி ஆதீனமழயர்,காஞ்சிபுரம் காமாக்ஷி அம்மன்  போன்ற கோவில்களில் இவரை காணலாம். காஞ்சி காமாக்ஷி அம்மன் கோவிலில் இருக்கும் சாஸ்தாவின் செண்டாயுதத்தை கொண்டு தான் கரிகால சோழன் இமய மலை வரை வென்றதாக ஒரு குறிப்பு உள்ளது. 

சிலப்பதிகாரத்தில் இவரை பற்றி குறிப்புகள் உள்ளது. காஞ்சி மஹா பெரியவர் எங்கள் குருநாதர் பிரம்மஸ்ரீ விஸ்வநாத சர்மாவிற்க்கு கொடுத்த அருளாணையின்படி ஆதி பூதநாதரே வேப்பம்பட்டு அஷ்ட சாஸ்தா திருக்கோவிலில் மூலவராக வர இருக்கிறார்.


சாஸ்தா வழிபாட்டின் தொன்மை

உலகம் முழுவதும் ஐயப்பன் வழிபாடு மிகவும் பிரபலமாகி வருகிறது.  எனினும் முன்னுக்கு பின்   முரண்பாடான  பல  புராணக்  கதைகளும், செவிவழி கதைகளையும் ஒன்றோடொன்று இணைத்து அவரவர் தம் கற்பனா வசதிக்கு ஏற்ப கூற ஆரம்பித்ததை தொடர்ந்து சாஸ்தா என்றழைக்கப்படும் ஸ்ரீ ஐயப்பன் அவதாரம், வழிபாடு பற்றிய சில சந்தேகங்கள் மக்கள் மனதில் எழுந்துள்ளன.

சாஸ்தா என்றதும் நம்மில் பலருக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் மட்டுமே நினைவுக்கு வரும். ஆனால் அகில உலகமெங்கும் கணக்கிலடங்கா சாஸ்தா கோவில்கள் நெடுங்காலமாகவே உண்டு. சாஸ்தா என்ற பெயர்  கொண்ட  மலை  California (கபிலாரண்ணியம்), America வில் உள்ளது  குறிப்பிடத்தக்கது. சபரிமலை ஐயப்பன் என்பது சாஸ்தாவின் அவதாரங்களில் ஒன்று.

யுகம் கடந்த புருஷனாக விளங்குபவர் சாஸ்தா. 

கிருதயுகத்தில், கந்த புராணத்தில் முருகபெருமான் அவதாரதிருக்கு முன்பு சாஸ்தா  இந்திராணியை  காத்தருளியதை பற்றி விவரித்து உள்ளது (இடம் : தென்பாதி கிராமம், சீர்காழி). அதே போல்  சிவபுராணத்திலும் சிவனை மதியாது யாகம் நடத்திய ரிஷிகளுக்கும், ரிஷி பத்தினிகளுக்கும் பாடம் புகட்ட சிவன் பிக்ஷாடனாகவும், திருமால் மோகினியாகவும் உருமாறி அவர்களை நல்வழி படுத்தியபின் சிவ-விஷ்ணு சேர்க்கையில் அயோனிஜனாக சாஸ்தா  அவதரித்தார் என்று  வழுவூர் மகாத்மியம்  கூறுகின்றது (இடம் : கழனிவாசல், வழுவூர்)

இராமாவதாரம் திரேதாயுகத்தில் நடைபெற்றது. புத்திர காமேஷ்டி யாகம் நடந்த பொது யாக குண்டத்திலிருந்து கையில் பாயச பாத்திரத்துடன் ஒரு "மகத்பூதம்" என்று வால்மீகி வர்ணிப்பது சந்தான ப்ராப்தி அருளும் சாஸ்தாவையே ஆகும். இராமர், சீதாதேவியை மணக்க, "சிவதனுசு" வில் சாஸ்தாவின் ஆவேச  சக்தியை  கொண்டு  முறித்ததாக கரந்தையார் பாளையம் வரலாறு கூறுகிறது. துவாபர  யுகத்தில் (மகாபாரத காலம்)  சாஸ்தா தோன்றியதற்கான ஆதாரம் உள்ளது (இடம் : சிதம்பரம் அருகே உசுப்பூர் சாஸ்தா கோவில்) கலியுகத்தில் பம்பையில் தவழ்ந்து பந்தள பாலனாக மகிஷியை சம்ஹாரம் செய்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம்

சிவனை அய்யன் என்றும் விஷ்ணுவை அப்பன் என்றும் அழைத்தவர்கள் ஹரி-ஹர புத்திரனை அய்யப்பன் என்றும் அழைக்கலாயினர். அய்யன் என்பது சாஸ்தாவை குறிக்கும். 

தமிழில் சாத்தன் என்ற பெயர் சாஸ்தாவையே குறிக்கும். தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கங்களில் இருந்த புலவர்களின் பெயர்களில் சாத்தன் என்ற பெயருடன் பலரை காணலாம். உதாரணமாக சீத்தலை சாத்தனார், மோசி சாத்தனார், ஒக்கூர் மாசாத்தனார் etc சிலப்பதிகாரம், புறநானூறு போன்ற தமிழ்  நூல்களிலும் சாத்தனாரை பற்றி குறிப்புகள் காணலாம். தற்போதய ஊர்களின்  பெயர்களில் சாத்தனூர் என்பதும் சாஸ்தாவே குறிக்கும்

மேற்கூறிய ஒரு சில எடுத்துக்காட்டுகளில் இருந்து நாம் தெரிந்து கொள்ளும் உண்மைகளில் சில:

சாஸ்தா அவதாரமும் வழிபாடும் மிகவும் தொன்மையானது, சங்க காலத்துக்கும் முற்பட்டது, புராண இதிகாச கலங்களுடன் சம்பந்தப்பட்டது. 
தமிழ் கலாசாரத்துக்கும், தமிழர் வழிபாட்டுக்கும் உரிய தெய்வமாகவே சாஸ்தா விளங்கி வருகிறார்.

சாஸ்தாவின் அவதாரங்கள் பற்பல. எனினும் 

"எட்டு அவதாரங்கள் உண்டு, 
 எட்டு ஸ்வரூபங்கள் உண்டு"

என்ற புராதீனமான வரவு பாடலின் அடிப்படையில் கலியுகத்திற்கு உகந்தவாறு ٨ அவதாரங்களின் பஞ்சலோக சிலாரூபங்களை செய்து காஞ்சி ஸ்ரீ பரமாச்சாரியார் அருளாணையின்படி எங்கள் குருநாதர் ஸ்ரீ விஸ்வநாத சர்மா உருவாக்கி  தன் வீட்டில் வழிபட்டு வந்தார். அந்த விக்ரஹங்களுக்கு  கோவில் கட்ட  முயற்சிகளும்  எடுத்தார். அவர் முயற்சிகளை திருவினையாக்க அந்த 8 வித அபூர்வ நிலைகளை கொண்ட சாஸ்தாவுக்கு திருக்கோவில் ஒன்றை அமைக்க முயற்சி எடுத்துக்கொண்டு வருகிறோம்.

Tracing back the Sastha Worship

This is a sincere effort to bring into light various facets of Sāstha, Sāstha worship across the world spread across various timelines. It’s a less known fact to common public that Lord Ayyappa at Sabarimala is also one of the facets of Aadhi Sāstha. There are innumerable temples, incarnations for Sāstha other than Sabarimalai. Sāstha is a generic Sanskrit term for a teacher - ‘Sāsthi Ithi Sāstha’. He is the teacher who guides to the path of righteousness. In the Yajur Veda, we could find a text like, “Sāstha adhipathir vo asthu” - Let Sāstha be the ruler (or master), which refers Sāstha as the ruler (or master) of the entire universe. ‘Kalau Sasthru Vinayakau’ - Sāstha & Vinayaka will be prominent gods in Kali Yuga. However, Sāstha worship dates back from Kritha Yuga.

There are innumerous references about Sāstha in various puranas like Kanda Puranam, Siva Puranam, Lalithopakhyanam, Ramayana & Mahabharata etc. If we notice these puranas, they have taken place in various Yugas. For instance, Kanda Puranam, Siva Puranam has taken place in Kritha Yuga; Ramayana has taken place in Tretha Yuga, and Mahabharatha in Dwapara Yuga. Many Sāstha temples have been built in various places of
Tamil Nadu, Kerala etc., based on these references. 

Athri Maharishi who lived during Ramayana period worshipped Sāstha near Suseendram Ashram. Vazhuvur Mahatmayam explains in its own style on Sāstha Jananam (Source: Kazhanivaasal, Vazhuvur). Age old Sāstha temples like Usuppoor Sāstha, Aanathandavapuram Raaja Sāstha etc between Chidambaram and Seekaazhi explain the references of Sāstha in Various texts. Sāstha worship was spread across the world several thousands of years back. We still find some references like Shasta hills, Shasta Lake, Shasta Park in California. It is believed that Native Americans - Mayans, Red Indians etc
worshipped Shasta several thousands of years back.

There is a Sahasranamam for Sāstha - ‘Kusa Dweepathipathi’ which articulate Sāstha as ruler of Africa. In Sanskrit, Kusa Dweepam refers to Africa. Kumari Kandam (Lemuria) – the land which connected south India to Australia, separated Coastal Africa by few kilo meters through sea. After Kumari Kandam sinked under the sea, many rulers from South India ruled northern African regions like Egypt. We could find several names of rulers for
around 20 generations like DJED-KARI-ISESI, SHEPSES-KARE, SANKH-KARE, HARIHARAS etc. who had alter name of Sāstha – ‘Kari’. Sāstha was refered as Kari in Tamil Nigandu. We may conclude that Sāstha was a deity worshipped (in a different name) in African regions also.

In 1894, Frederick Spencer Oliver (a researcher) published a book ‘A Dweller on Two Planets’, which claimed that survivors from a sunken continent called Lemuria were living in or on Mount Shasta in northern California. Oliver claimed the Lemurians lived in a complex of tunnels beneath the mountain and occasionally were seen walking the surface dressed in white robes. Also, we could find Athen (at present Italy) rulers with name like Pandion (Tamil equivalent Pandian) who ruled between 1437 and 1397 BC. He had a son ERECHATUS (Tamil equivalent Erichatthan) and his wife PRAXITHER

(Tamil equivalent Pradhakshinai) which makes us feel that Sāstha was worshipped in Athens too. Lord Ayyappa could be seen at Angkor Wat temple, Cambodia. There were many poets of Sangam period who are named "Saathanar" (Seethalai Saathanar, Mosi Saathanar, Okkur Maasathanar etc) - a name given after Lord Sāstha. Sāstha is described in Tamil epics like Silapathikaram, Puranaanooru etc as “Saathanar”. Even today, we could find many places in Tamil Nadu like “Saathanur” which were named after Sāstha. From all these references mentioned above, we may conclude that Sāstha was worshipped across globe several ages back.The famous Sāstha Varavu song, “Yettu avadharangal undu, yettu swaroopangal undu” suggests 8 important incarnations & 8 forms of Sāstha; and ‘Dyana ratnavali’ confirms the same fact. 

We wish to brief about the Ashta Sāstha identified by our Guruswamy based on his several years of research. Even though there are more than hundreds of Sāsthas in existence, our Guruswamy has chosen eight Sāstha incarnations for Loka Kshema. He has also made panchaloka vigrahams of these 8 Sāsthas along with Aadhi Boodha Naadha Sāstha, which makes it 9 altogether. Lets dive deep in to the world of Ashta Sāstha

How to reach Ashta Sastha Temple?






The temple construction is happening @ Sai Nagar, Veppampattu,  Tiruvallur District

•Less than 1km from Veppampattu Railway station,  Veppampattu Railway station is 18th railway station from Central towards Arakonam
•Buses from Tiruvallur towards Chennai pass by Veppampattu. 

Few buses to name:
M54V, 54V, 77V, M77V(Extn), 71V, 70P, 40A, Ext 571, 572, 572K

About Us

Villivakkam Sree Viswanatha Sharma Ashta Sastha Temple Trust is a Religious & Charitable Trust started in 2011 to bring various facets of Sastha into light by building a temple for Ashta Sastha.

The trust is started in the name of our beloved Guruswamy Brammasri Viswanatha Sharma, who has sacrificed his entire life for the service of Lord Ayyappa. Our Guruswamy made an extensive study of the Sastha concept, Ayyanar and Ayyappan chose eight Sastha incarnations for Loka Kshema eventhough there are few hundreds of incarnations in reality. He also made panchaloka idols along with Aadhi Boodha Naadha Sastha, which makes it nine altogether. 

The famous Sastha Varavu song, “Ettu Avadharangal Undu, Yettu Swaroopangal Undu” suggests eight important incarnations and eight forms of Sastha ; and ‘Dyana ratnavali’ confirms the same fact. 

The eight forms of the deity will be enshrined in this temple that was visualised by Gurusami Viswanatha Sharma, who was ordained by Paramacharya. He visited almost all the Sastha temples south of India and dedicated himself to the renovation of temples. He was instrumental in the conduct of Sastha Tirukkalyanam and composed Sasthru Ashtapati, Ayyan Tiruvadippa, etc.

Our Guruswamy started a spiritual organisation by the name “Sree Ayyappa Bhajanai Sangam” (https://sasthakalyan.blogspot.in/) in 1970s with similar objectives. We intend publish articles related to Sastha Thiru Kalyanam, Sastha Slogams, Songs, other events, any other interesting article on Sastha in https://sasthakalyan.blogspot.in.




This blog will be exclusive to Ashta Sastha avatars, Ashta Sastha Temple construction, events etc., other temple related activities

He aspired to build a temple during his lifetime. He has struggled&sacrificed a lot for building an Ashta Sastha temple for more than 10 years. Unfortunately, he was not able to do it in his lifetime. We have taken oath that we will make his aspiration come true.




Please feel free to reach out to us at any point of time. Our contact details: 

Villivakkam Sree Viswanatha Sharma Ashta Sastha Trust
G2, SPL Aiswarya Flats,
7/4, 1st Avenue, Ashok Nagar, Chennai -83,
Landmark: Near Lakshman Sruthi
Ph: +91 99625 62067 / +91 94441 09431
sasthakalyan@gmail.com

We are seeking donations to build the Ashta Sastha temple @ Veppampattu, Tiruvallur district. We request devotees to contribute liberally for the Ashta Sastha temple project either as materials or in the form of Cheque / DD addressed to Villivakkam Sree Viswanatha Sharma Ashta Sastha Trust and get the blessings from the almighty.

Contribution in form of materials are accepted

Bank Account details:
Villivakkam Sree Viswanatha Sharma Ashta Sastha Trust
State Bank of India, Villivakkam Branch, Chennai
A/c Number: 3168 395 4936, IFSC Code: SBIN 000 7108