Friday, December 8, 2017

பாசிக்குளம் விநாயகர்

பொதுவாக நாம் முன்னோர்கள் அவர்களை அறிமுகப்படுத்திக்கொள்ள தான் பிறந்த ஊரை குறிப்பிடுவது வழக்கம். இந்த இடத்தில், இந்த ஊரில் தாம் பிறந்து இருக்கிறோம் என்பது இன்னமும் சிலர் பெருமிதத்தோடு சொல்லுவதை பார்க்க முடியும்.

"சாத்தனுர்" என்று பல ஊர்/கிராமங்கள் பெயர்கள் உள்ளன. "சாத்தன்+ஊர்". இதில் சாத்தன் என்பது சாக்ஷாத் நம் ஐயனார் / ஸ்ரீ தர்மசாஸ்தாவையே குறிக்கும்.

சாத்தனுர் என்ற பெயர் கொண்ட கிராமங்களை பல இடங்களில் குறிப்பாக சோழ நாட்டில் காண முடிகிறது.

பல சாத்தனூர் இருந்தாலும் எடுத்துக்கட்டி சாத்தனூருக்கு ஒரு தனி சிறப்பு உண்டு.

இந்த சாத்தனூரின் முழு பெயர் "எடுத்துகட்டி சாத்தனூர்". மார்கண்டேயருக்காக சிவபெருமான் தனது இடது காலால் எமனை உதைக்க, பல துண்டுகளாக சிதறி கடவூர் மற்றும் சுற்று பகுதிகளில் விழுந்தன. அந்த பாகங்களை மீண்டும் எடுத்து கட்டி எமனை உயிர்ப்பிக்க வழி செய்த இடம். ஆதலால் எடுத்துகட்டி சாத்தனூர். எமபயம் நீங்கும் இடம்.

புராணங்களின் அடிப்படையில் சாஸ்தாவதாரம் வைகுந்ததிலும் தாருகவனத்திலும் அறிய முடிகிறது. இத்தகைய வரலாறுகள் பூலோகத்தில் உள்ள தளங்களில் நடந்ததாக ஸ்தல மஹதமியம் இருக்கும். சாத்தனூருக்கு மிக அருகில் உள்ள ஊர் ஹரி-ஹரன்கூடல். ஹரியும் ஹரனும் இணைந்து சாஸ்தா அவதரித்த இடம் என்பதை உணர்த்தும் வகையில் உள்ளது.

விநாயகர் காட்சி:
இந்த விநாயகரை பார்க்கும்போது ஒரு கையில் சின்முத்திரையும் மற்றொரு கையில் பாதங்களை நோக்கியும், இரண்டுகால்களை யோகபட்டம் கட்டி இருப்பதையும் காண முடிகிறது.

ஹரிஹரன் கூடலில் அவதரித்த சாத்தன் இந்த இடத்துக்கு வந்து விக்நங்கள் தீர விநாயகரை குறித்து கடுந்தவம் செய்தார். அக்னி வடிவில் சாத்தனுக்கு காட்சி அளித்தார் விநாயகர். பின்னர் தன் அருட்கோலத்தை காட்டினார். அதன் அடிப்படையில் அமைந்த சந்நிதி தான் இந்த பாசிக்குளம் விநாயகர் சந்நிதி.

இந்த விநாயகரை வழிபட கிரக தோஷங்கள் நீங்கும், சனி தோஷங்களை அகற்றுவார். இடர்களையும் இந்த விநாயகர் இன்னல்களை அகற்றுவார்.

பங்குனி உத்திரம் அன்று வழிபடுவது விசேஷம், நட்சத்திரங்களில் உத்திரம், கிழமைகளில் சனிக்கிழமைகளில் வழிபட சனிதோஷங்கள் அகலும்.

இந்த கோவில் இருக்கும் இடம்: எடுத்துகட்டி சாத்தனூர், தரங்கம்பாடி, நாகை மாவட்டம்.

இந்த ஸ்தல வரலாற்றின் அடிப்படையில் தான் வேப்பம்பட்டு அஷ்ட சாஸ்தா திருக்கோவிலுக்கு "சின்மய கணபதி" வருகிறார்.

பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற பரந்தாமனை போற்றுவோம் என்று நம் முன்னோர்கள் கூறியதுபோல விநாயகர் வடிவில் ஐயனை காணும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் எழுந்தது தான் இந்த விநாயகர் பிரதிஷ்டை

No comments:

Post a Comment