Wednesday, April 11, 2018

காஞ்சி காமாக்ஷி அம்மன் சன்னதியில் மற்றொருஆதி சாஸ்தா

அடுத்த மாதம் (27-05-2018) வேப்பம்பட்டு அஷ்டசாஸ்தா திருக்கோவிலில் கும்பாபிஷேகம். இன்று (11-04-2018) கோவில் bank account இல் சில ஆயிரங்கள் மட்டுமே balance உள்ளது.

இன்னும் திருப்பணி வேலைகள் பல பல. ஸ்தபதி வேலை (சிற்பம்), ஸ்தபதி வேலை (சுதை) - பூசுவேலை, painting,  கதவு, படிக்கட்டுகளில் வரும் கைப்பிடி, கலசம் என்று கட்டுமான பணிகள் அடுக்கி கொண்டே போகலாம்.

இதற்கு மேல் கும்பாபிஷேக வேலைகள் ஏற்பாடு செய்யவேண்டும்: அன்னதானம், வைதீக சம்பாவனை, ஹோம திரவியங்கள், பந்தல், மேளம், சீரியல் லைட், mike, வஸ்திரம் என்று செய்ய வேண்டிய காரியங்களும் நீண்டுக்கொண்டே போகின்றது.

இருப்பதோ ஒரு மண்டலம்; சுமார் 20 லட்சங்கள் தேவைப்படுகிறது. இவ்வளவு பணிகளை எப்படி செய்ய போகிறோம் என்று ஒரு விதமான பயம், மனக்குழப்பம். மற்றொரு பக்கம் "இது நம் பணி இல்லை, இது ஆண்டவன் பணி தானே? தன் காரியத்தை சிறப்பாக நடத்திக்கொள்ள அவனுக்கு தெரியும். பொம்மலாட்டத்தில் கீழே ஆடிக்கொண்டு இருக்கும் பொம்மைகள் தான் நாம். நம்மை மேலிருந்து இயக்கிக்கொண்டு இருப்பவர் மேலே இருக்கிறார். எதை எப்படி செய்யவேண்டும் என்று அவருக்கு தெரியும்" என்று உள்ளுணர்வு அவ்வப்பொழுது தைரியம் கொடுத்துக்கொண்டே வருகிறது.

இதற்கு நடுவில் 4-5 நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேக முதல் பத்திரிக்கையை காஞ்சி மடத்தில் சமர்ப்பிக்க சென்றிருந்தேன்; எந்த ஒரு நல்ல விஷயங்களை ஆரம்பிப்பதற்கு முன் காஞ்சி மடம் சென்று ஆரம்பிக்க வேண்டும் என்பது என் தந்தை, வில்லிவாக்கம் விஸ்வநாத சர்மா, தன் செயல்கள் மூலம் சொல்லி கொடுத்த பாடம்.

எனக்கும் என் தந்தைக்கும் சில விஷயங்களில் ஒற்றுமை இருக்கும். ஆன்மீக விஷயங்களில் ஆண்டவனை மட்டுமே நம்பி இரங்கக்கூடியவர். மனிதர்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறுபவர்கள். மாறாத தன்மை கொண்டவர் ஆண்டவன் மட்டுமே.


"நித்தம் நித்தம் மாறுகின்ற உலகிலே,
நித்திய ப்ரம்மச்சாரியோ சபரியிலே"

 அப்படி காமாக்ஷி அம்மன் கோவில் சென்றிருந்த பொழுது அக்கோவில் ஸ்தானிகர் திரு நடராஜ சாஸ்திரிகளை சந்திக்க நேர்ந்தது. 6 வருடங்கள் முன்பு "guru samarpanam" என்ற மஹா பெரியவரின் பொன்மொழிகள் கொண்ட ஆங்கில புத்தகத்தை தொகுக்க முதல் ஆதரவு கரத்தை கொடுத்தவர் இவர் தான். என்னை சேர்ந்தவர்கள் பலருக்கும் ஆங்கில புத்தகம் என்பதால் ஒரு பயம். புத்தகத்தை காமாக்ஷி அம்மன் கோவிலில் பால பெரியவா வெளியிட ஏற்பாடு செய்து கொடுத்தார். காமாக்ஷி அம்பாளின் கருணையினால் இந்த புத்தகம் என்னை திரு அப்துல் கலாம் அய்யாவை சந்திக்கும் அளவிற்கு  எடுத்து சென்றது.



போன வாரம் கோவில் கும்பாபிஷேகத்தை பற்றி அவரிடம் சொன்னவுடன் அகமகிழ்ந்து புன்னகைத்தார். வேப்பம்பட்டு அஷ்டசாஸ்தா கோவிலின் மூலவர் ஸ்ரீ ஆதி பூதநாதர். காஞ்சி காமாக்ஷி அம்மன் கோவிலில்  காமகோட்டத்தின் பிரகாரத்தில் அவரை காணலாம். 1987 ஆம் ஆண்டு காஞ்சி மஹா பெரியவா என் தந்தைக்கு கொடுத்த அருளாணை சுமார் 30 வருடங்கள் பிறகு நிறைவேறுகிறது என்ற பெருமிதம் அவர் கண்களில்.

"பெரியவாளிடம் மூலவர் விக்ரஹத்தை காட்ட ஆசைப்படுகிறேன்" என்று நான் கூறியவுடன், "தசமஹாவித்யா ஹோமம் 09-04-2018 முதல் 18-04-2018 வரை நடக்கிறது. ஹோமம் நடக்கும் வசந்த மண்டபத்தில் விக்ரஹத்தை வைத்துக்கொள்ளலாம். பெரியவா நிச்சயம் பார்ப்பார்" என்றார்.



இன்று காலை (11-04-2018) சென்னையிலிருந்து காமாக்ஷி அம்மன் கோவில் வந்து விக்ரஹத்தை திரு. நடராஜ சாஸ்திரிகள் சொன்ன இடத்தில் வசந்த மண்டபத்தில் வைத்துவிட்டு சென்னை திரும்பினேன்.


கொஞ்ச நேரத்தில் ஒரு கால் வந்தது. திரு நடராஜ சாஸ்திரிகள் பேசினார். "இன்று நம் தசமஹா வித்யா ஹோமத்தின் உபயதாரர் Mr. X இப்பொழுது வந்தார். அவர் குலதெய்வம் நம் காமாக்ஷி அம்மன் கோவிலில் இருக்கும் சாஸ்தாவை போல் இருப்பாராம். வசந்த மண்டபத்தில் இருக்கும் இந்த விக்ரஹத்தை தரிசித்தவுடன் தன் குலதெய்வத்தை நேரில் தரிசித்த சந்தோஷம் Mr. X இற்கு கிடைத்தது. திங்கட்கிழமை (09-04-2018 காலை) வசந்த மண்டபத்திற்கு வர வேண்டிய விக்ரஹம் இன்று காலை தான் சாஸ்தா வந்தார் என்றவுடன் Mr X இற்கு மகிழ்ச்சி. காரணம்: தனக்காகவே சாஸ்தா  இன்று காலை வந்ததாக Mr X கருதுகிறார்" என்றார்.

என்னை புதன்கிழமைக்குள் (11-04-2018) விக்ரஹத்தை காமாக்ஷி அம்மன் கோவில் வசந்த மண்டபத்தில் வைத்துவிட வேண்டும் என்று என்னை ஏதோ ஒரு உள்ளுணர்வு சொன்னது. காமாக்ஷி அம்மன் கோவிலுக்கு வந்த Mr X இற்கு தன் குலதெய்வத்தை தரிசித்த மகிழ்ச்சியை தர வேண்டி தான் இந்த லீலையோ? இன்றே பெரியவாளுக்கு சாஸ்தா காண்பிக்கவோ? என்ன காரணம் என்று தெரியவில்லை. எது எப்படியோ, எல்லாம் ஆண்டவனுக்கே வெளிச்சம். பொறுத்திருந்து பார்க்கலாம்

"நடப்பது எல்லாம் நாராயணன் செயல்"


Saturday, April 7, 2018

அஷ்டசாஸ்தா திருக்கோயில் கும்பாபிஷேகம் (27-05-2018)

ஸ்வாமியே சரணம் ஐயப்பா,
சென்னைக்கு மிக அருகில் உள்ள  வேப்பம்பட்டு கிராமத்தில் (திருவள்ளுர் மாவட்டம்) அஷ்டசாஸ்தா திருக்கோவில் கட்டிக்கொண்டு வருகின்றோம். எங்கள் குருஸ்வாமி பிரம்மஸ்ரீ வில்லிவாக்கம் விஸ்வநாத சர்மா அவர்களது நீண்ட நாள் ஆசியினை பூர்த்தி செய்ய இந்த திருப்பணியை எடுத்துள்ளோம்.

வரும் 27-மே-2018 (ஸ்ரீவிளம்பி 13, ஸ்வாதி நட்சத்திரம்) அன்று சுமார் 11.30 மணி அளவில் சிம்ம லக்கினத்தில் நூதன கும்பாபிஷேகம் செய்ய உள்ளோம்.

சின்மய விநாயகர், எல்லா சாஸ்தாவின் அவதாரங்களுக்கும் ஆதியாகிய ஆதி சாஸ்தா (ஐயனார்) மற்றும் ஸ்ரீ தர்ம சாஸ்தாவிற்கு கும்பாபிஷேகம் செய்ய உள்ளோம்.

ஆன்மீக அன்பர்கள் அனைவரும் வருகை தந்து திருவிழாவினை சிறப்பித்து தருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

பக்தர்கள் நன்கொடைகளை கீழ்கண்ட account ற்கு செலுத்தி ரசீது பெறுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். ரசீது பெற எங்களை தொடர்பு கொள்ள வேண்டிய எங்கள் 9962562067 / 9444109431

Bank account details
IFSC code: SBIN0007108
Savings account no: 31683954936

Account Name : Villivakkam Sree Viswanatha Sharma Ashta Sastha Trust
Bank Name : State Bank Of India (SBI), Villivakkam branch, Chennai

கோவிலுக்கு வர:
https://goo.gl/maps/TPaCBqvbmS22

கும்பாபிஷேக பூஜை நாட்கள்: 25,26,27 மே,2018



Monday, April 2, 2018

01-04-2018 ஸ்ரீ மஹா கணபதி ஹோமம்

ஸ்வாமி சரணம்,

01-04-2018 அன்று நடந்த ஸ்ரீ மஹா கணபதி ஹோமம் இறைவன் அருளால் இனிதே முடிந்தது.

வந்தவர்கள் எல்லோருக்கும் ஒரு ஆத்ம திருப்தியுடன் வீடு சென்றதை உணர முடிந்தது.

வரும் 27-மே-2018 கும்பாபிஷேகத்துக்கு இன்னும் உத்வேகத்துடன் உற்சாகத்துடன் திருப்பணி செய்ய உள்ளூர் மக்கள் தயாராக உள்ளனர்.

உத்தர சபரிமலை என்று ஸ்ரீ மஹாரண்யம் முரளிதர குருஜி சொன்னது தெரியாமல் தானாகவே இந்த கோவிலுக்கு இந்த பெயரிட்டு மகிழ்ந்தார் ஐயப்ப குருநாதர் திரு கல்யாண் ஜி, மகா கணபதி ஹோமத்திற்கு வருகை தந்த ஆன்மீக அன்பர்களும் இதை கேட்டு இன்ப வெள்ளத்தில் திளைத்தனர்.

காஞ்சி பெரியவர் 2012 வருடம் சொன்ன அருள்வாக்கு "ஐயப்பன் ஏற்கனவே வேப்பம்பட்டு வந்துட்டான். போ. போய் க்ஷேமமா கோவில் கட்டும் வேலைகளை கவனி" என்று சொல்லி கோவில் கட்ட இடம் அமைத்து கொடுத்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருக்கு ஏலக்காய் மாலையை பிரசாதமாக அளித்தார். ஏனோ தெரியவில்லை, நேற்று மந்திரங்கள் சொல்லும்போது திரும்ப திரும்ப வந்த வார்த்தை "ஜீரணோத்தாராண". ஒருவேளை ஐயப்பன் ஏற்கனவே வந்து விட்டதால் ஐயப்பனே இப்படி சொல்ல வைத்தாரோ? எது எப்படியோ, எல்லாம் அவன் செயல். அவனின்றி ஓர் அணுவும் அசையாது. ஐயப்பன் தான் இந்த அக்ஷரத்தையும் உச்சரிக்க வைத்தார் என்பதில் சந்தேகம் சிறிதளவும் இல்லை.

ஸ்வாமியே சரணம் ஐயப்பா!!!











Wednesday, February 21, 2018

வேப்பம்பட்டு அஷ்டசாஸ்தா திருக்கோவில் மஹா கணபதி ஹோமம் 01-04-2018

ஸ்வாமி சரணம்,

வரும் ஏப்ரல் மாதம் 1 (ஹேவிளம்பி பங்குனி 18) வேப்பம்பட்டு அஷ்ட சாஸ்தா கோவிலில் பிரமாண்டமான அளவில் மஹா கணபதி ஹோமம் நடைபெற இருக்கிறது.

அனைவரும் வருகை தந்து இறைவன் அருளுக்கு பாத்திரம் ஆகும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

https://ashtasastha.blogspot.in/2017/01/how-to-reach-ashta-sastha-temple.html?m=1

மேலும் விவரங்களுக்கு 9962562067 / 9444109431 என்ற எண்ணை அணுகவும்

பூஜாசாமான்கள் தேவை:

* 108 மட்டை தேங்காய் (அல்லது) 108 கொப்பரை
* 108 செவ்வாழை
* 108 கரும்பு துண்டு (1 முழம் நீளம்)
* 30pkts நெல்பொறி (0.5 மூட்டை)
* 5kg அவல் பொறி
* 108+50 வெள்ளை எள்ளு உருண்டை
* 108+50 கொழூகொட்டை
* 108+50 அப்பம்
* 12-15 கட்டு அருகம்புல் * தேன் 250gms
* சத்துமாவு (2.5kgs பொறி அரிசி, ஏலக்காய், நாட்டு சக்கரை)
* 100 செங்கல்
* இதர பூஜா சாமான்கள் சுமார் 5000 rs

அஷ்டசாஸ்தா ஐயப்பன் விக்ராஹம்

ஸ்வாமி சரணம்,

வேப்பம்பட்டு அஷ்ட சாஸ்தா திருக்கோவில்

ஐயப்பன் ஐம்பொன் விக்கிரஹம் செய்ய தேவையான உலோகங்கள்:

* வெள்ளி (தங்களால் இயன்றவரை)
* Copper (செம்பு) - 80 கிலோ
* White Lead (வெள்ளை ஈயம்) - 12 கிலோ

மேலும் விவரங்களுக்கு 9962562067 / 9444109431 என்ற எண்ணை அணுகவும்.

சென்னை நங்கநல்லூர், நாராயண பிரவசன மண்டபத்தில் 10-03-2018 காலை 9.00 மேல் மதியம் 1.30 குள்

சாஸ்தா திருக்கல்யாண உற்சவம் நடக்க இருப்பதால் நேரில் பொருளாக
தாங்கள் சமர்பிக்க வேண்டி பணிவன்புடன் கேட்டுக் கொள்ளுகிறோம்.

ஸ்வாமியே சரணம் ஐயப்பா